உள்நாட்டு செய்திகள்

இலங்கை போக்குவரத்து சபைக்கு 2500 புதிய பேருந்துகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இந்த வருடத்தின் இறுதிக்குள் இலங்கை போக்குவரத்து சபைக்கு 2500 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது 6 ஆயிரம் பேருந்துகள் காணப்படுவதாகவும் அதில் 2 ஆயிரம் பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தக்கூடிய நிலையில் காணப்படுவதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் 36 முதல் 56 வரையிலான ஆசனங்களை கொண்ட 400 பேருந்துகளையும் 26 ஆசனங்களை கொண்ட 100 பேருந்துகளையும் கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து சேவை முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது

Related posts

ரயில் விபத்துக்களை கட்டுப்படுத்தும் புதிய திட்டம் இன்று முதல்…

wpengine

கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையம் வைத்தியசாலையாக மாற்றம்

wpengine

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் செல்லாதா?

wpengine