விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் சார்ஜாவில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு, சார்ஜா கிரிக்கட் அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை கிரிக்கட் அணி இந்த மாத இறுதியில் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக அறிவித்துள்ள போதும், பாதுகாப்பு நிலைமைகளால் இந்த தொடர் இடம்பெறுவதில் ஐயம் நிலவுகிறது.

இந்தநிலையில் தேவை ஏற்படி இந்த தொடரில் சார்ஜாவில் நடத்த முடியும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இதுதொடர்பில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கட் நிர்வாக அதிகாரிகள் யாரும் கருத்துக்களை தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சுதந்திரக் கிண்ண முக்கோணத் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு….

wpengine

இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட்; இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள்

wpengine

கிரிக்கெட் விருது இரவில் சமரி – மாலி – திசர உள்ளிட்ட வீரர்களுக்கு விருதுகள் [PHOTOS]

wpengine