Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கை நிதி அமைச்சராக மீண்டும் அலி சப்ரி? ரணிலை கழற்றிவிட முடிவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி (Ali Sabry)  நிதி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் என தெரியவருகின்றது.

நிதி அமைச்சு பெறுப்பு தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) வசமே உள்ளது.

இருப்பினும், நிதி அமைச்சு பிரதமர் வசம் இருப்பதை மொட்டு கட்சி விரும்பவில்லை. மத்திய வங்கி ஆளுநருடனும் பிரதமருக்கு முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே நிதி அமைச்சு பதவியை பிரதமரிடம் இருந்து கழற்றி, அலி சப்ரிக்கு கையளிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) உத்தேசித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரான அலி சப்ரி, ஏற்கனவே நிதி அமைச்சு பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

செப்டம்பர் மாதத்திற்குள் நாடு திறக்கப்படும்

wpengine

இரண்டாயிரத்தைக் கடந்த கொரோனா தொற்றாளர்கள்

wpengine

மரண தண்டனையினை மீள் அமுல்படுத்தல் தொடர்பான வாதம் இன்று நாடாளுமன்றில்

wpengine