ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு தங்க மாலை அணிய உள்ளிட்ட பலவற்றுக்கு தடை…



இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு பல்வேறு புதிய தடைகள் விதிக்கப்பட்டு வருகின்ற இந்நிலையில், தற்போது தங்கம் உள்ளிட்ட உலோக மாலைகளை அணிவதற்கும் அவர்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் தகவல்களை மேற்கோள்காட்டி, ஊடகமொன்று குறித்த இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே பயிற்சி வேளையில் facebook செல்லவும், பாடல் கேட்கவும் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.

சந்திக்க ஹத்துருசிங்க இலங்கை அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து குறித்த இந்த தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியை மீண்டும் திறமை மிக்க அணியாக மாற்றுவதற்கே இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக கிரிக்கெட் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

#g-reeshma

Related posts

கரப்பான் பூச்சிற்கு பயந்த துருக்கி அதிபர்

wpengine

கிரிக்கெட் நட்சத்திரம் அம்லா யாரெண்டு முழு உலகமும் அறிந்து கொள்வார்கள்

wpengine

விமானத்தில் நடுவானில் ஆக்ஸிஜன் கருவி இயங்காமல் பயணிகள் பரிதவிப்பு

wpengine