விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் குறித்து முதல் முறையாக ஏஞ்சலோ மேத்யூஸ் கருத்து…



இலங்கை கிரிக்கெட் அணி கண்டியில் நடத்திய பயிற்சி முகாம் குறித்து, இலங்கை அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் திருப்தி வெளியிட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் நிமித்தம் இலங்கை கிரிக்கெட் அணி ஒருவார கால பயிற்சி முகாமை கண்டியில் நடத்தியது.

மழை காரணமாக இரவு வேளை பயிற்சிகளைப் பெற முடியாதிருந்த போதும், குறித்த இந்த பயிற்சிகள் ஊடாக முக்கியமான பல அனுபவங்களைப் பெற்றுக் கொண்டதாக மேத்யூஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதற்கு முன்னர் தாம் மேற்கிந்திய தீவுகளில் விளையாடியுள்ள போதும், முதல்முறையாக அங்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில், அந்த தருணத்துக்காக மகிழ்ச்சியுடன் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

இலங்கை அணியினர் எமக்கொன்றும் சவால் இல்லை – என்டர்சன் சிவப்பு சமிஞ்சை

wpengine

ஆப்கானிஸ்தானை பின்தள்ள இலங்கை அணிக்கு ஒரு வரம்..

wpengine

20 ஓவர் உலகக் கோப்பையை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல்

wpengine