உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் ஒப்பந்தத்தை நிராகரித்தமை குறித்து லசித் மாலிங்க கருத்து..


இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் வீரர்களுக்கான ஒப்பந்தத்தை தான் நிராகரித்ததாக லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 11 மாதங்களாக இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடாத அவர், விளையாடுவதற்கான பொருத்தமான உடல்நிலைமை வரும் வரை எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

” எனக்கு கிரிக்கெட் நிறுவனத்தினால் ஒப்பந்தம் வழங்கப்பட்டது, எனினும் அந்த ஒப்பந்தத்தை என்னால் ஏற்க முடியாது என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் நான் தெரிவித்தேன். ஏன் என்றால் கடந்த 11 மாதங்களாக நான் நாட்டிற்காக விளையாடவில்லை.

நான் கிரிக்கெட் விளையாட உரிய நிலைக்கு வந்த உடன், அடுத்த ஒப்பந்தத்தில் என்னை கவனத்தில் எடுத்து கொள்ளுமாறு நான், கிரிக்கெட் நிறுவனத்திற்கு தெளிவுப்படுத்தினேன்.

எனக்கு ஒப்பந்தம் பெற்று கொடுத்தமை குறித்து மகிழ்ச்சி, எனினும் நான் தீர்மானித்தேன், விளையாடாத நான் இந்நேரத்தில்  ஒப்பந்தத்தை பெற்று கொண்டால் அது மற்றைய வீரர்களுக்கு செய்யும் அநீதியாகும்.

எனக்கு பெற்று கொடுக்கப்படும் பணம் வேறு ஒரு இளம் வீரரின் வளர்ச்சிக்கு பயன்படுத்த கூடிய சந்தர்ப்பம் உள்ளது.

எனது தீர்மானத்தினை ஏற்று கொண்டார்களா? இல்லையா? என இதுவரை எனக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை.

எனினும் கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் எனது தீர்மானித்திற்கு ஒப்புக் கொண்டு அதனை ஏற்பார்கள் என நினைக்கிறேன் ” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஊடகவியலாளர்களுக்காக அடையாள  அட்டை; மகிழ்ச்சியான செய்தி

wpengine

நாட்டை முழுமையாக முடக்க தீரமானம் இல்லை

wpengine

19 மாணவர்கள் தொடர்ந்தம் விளக்கமறியலில்

wpengine