உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை கிரிக்கட் அணி மீதான தாக்குதல் – அறுவர் மீது குற்றப் பத்திரிகைகள் தாக்கல்



2009ம் ஆண்டு இலங்கை கிரிக்கட் அணி மீது பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் 6 பேர் மீது குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின் லாகூரில் இலங்கை கிரிக்கட் வீரர்கள் பயணித்த பஸ் மீது 2009 மார்ச் 3ம் திகதியன்று தாக்குதல் நடத்தப்பட்டபோது இலங்கை வீரர்கள் சிலர் காயமடைந்தனர்.

அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிச் சென்ற பொலிஸார் உட்பட்ட 8 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு அழைக்கப்பட்டபோது குறித்த 6 பேர் மீதும் குற்ற  பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு ஜூன் 30ம் திகதிக்கு பின்னர் சாட்சிப் பதிவுகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் முதல் மூன்று சந்தேகத்திற்குரியவர்கள் பிணையில் செல்லஅனுமதிக்கப்பட்டனர்.

Related posts

வாக்குபெட்டிகள் அனைத்தும் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன

wpengine

இலங்கையின் முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி சர்வதேசத்திடம் கோரிக்கை..

wpengine

வில்பத்து வழக்கில் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான தீர்ப்பை இடைநிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு..!

wpengine