உள்நாட்டு செய்திகள்

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் கைது



இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 26 பேர் இன்றைய தினம் காலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் அதிகாலை வடமராட்சி கடற்பகுதிக்குள் 3 படகுகளில் அத்துமீறி நுழைந்த மீனவர்கள் தொடர்பாக வடமராட்சி மீனவர்கள் வழங்கிய தகவல் அடிப்படையில் கடற்படையின் கரையோர ரோந்துப்படை குறித்த மீனவர்களை கைது செய்துள்ளது.

கைதான மீனவர்கள் இன்று காலை 9 மணியளவில் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த 26 மீனவர்களும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

குருநாகல் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து

wpengine

தடைசெய்யப்பட்ட பொலித்தீன் பாவனை தொடர்பில் 9000 முறைப்பாடுகள்…

wpengine

இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று!

News Editor