வணிகம்

இலங்கை – உலக வங்கி இரண்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்து..



(FASTNEWS|COLOMBO) இலங்கையும் உலக வங்கியும் இரண்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த இந்த உடன்படிக்கைகள் சுவாத்திய மாற்ற நெருக்கடிகளிலிருந்து மீண்டெழும் ஆற்றலை விருத்தி செய்வதுடனும், சிறு விவசாயகளின் உற்பத்தித்திறனை அதிகரித்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன் தொடர்புடையவை.

இரு உடன்படிக்கைகளும் 15 கோடி டொலர் பெறுமதியானவை என உலக வங்கி அறிவித்துள்ளது.

வொஷிங்டனில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கு பொறுப்பான துணைத்தலைவர் ஹாட்விக் ஷாபர், Hartwig Schafer, நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.சமரதுங்க ஆகியோர் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டனர்.

Related posts

கார்களின் பதிவு வீழ்ச்சி…

wpengine

எயார்டெல் வழங்கும் வரையறையற்ற அழைப்புகள்

wpengine

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரி விலக்கு

News Editor