விளையாட்டு

இலங்கை அணி லாகூர் செல்வதனை உறுதி செய்தது இலங்கை கிரிக்கெட் நிறுவனம்…



இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இறுதி இருபதுக்கு 20 போட்டி லாகூரில் இடம்பெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 29ம் திகதி லாகூர் மைதானத்தில் குறித்த போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் அணி கடந்த 2009ம் ஆண்டு பாகிஸ்தானில் விளையாடியபோது, அவர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். குறித்த சம்பவத்தின் பின்னர் முக்கிய நாடுகள் பல தமது அணிகளை பாகிஸ்தானுக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டி வந்தன.

தற்போது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இரு அணிகளும் டெஸ்ட் தொடரை நிறைவு செய்துள்ளதோடு, ஒருநாள் தொடரில் மோதி வருகின்றன.

இதனையடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட T-20 தொடரில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இதில் கடைசிப் போட்டி மட்டும் பாகிஸ்தானின் லாகூரில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. எனினும், குறித்த முடிவு தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, இந்தத் தீர்மானத்தில் இழுபறி நிலை ஏற்பட்டது. எனினும், தற்போது குறித்த போட்டி லாகூரில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)

Related posts

புதிய மைல் கல்லை எட்டிய டில்ஷான்

wpengine

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் இன்று…

wpengine

இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைமை லெப்ரோய் வசம்..?

wpengine