உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை அணியுடனான தொடரினை குறைக்க, மேற்கிந்தியத் தீவுகள் புதிய அட்டவணை…



எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கை அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 03 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவிருந்தது.

குறித்த இந்தத் தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை அணியும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 03 போட்டிகளை இரண்டாக குறைத்து அதற்கு பதிலாக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவோம் என்ற புதிய அட்டவணையை மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையானது இலங்கை கிரிக்கெட் சபைக்கு முன்வைத்துள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை கடைசி டெஸ்ட் போட்டிக்கு பதிலாக 03 ஒருநாள் போட்டிகளில் விளையோடுவோம் என மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்திடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதுதான் குறித்த இந்தப் போட்டி குறைப்புக்கான காரணம் என்றும் தகவல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

 

#rishma

Related posts

பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

wpengine

அடுத்த மாதம் முதல் நீர் கட்டணம் அதிகரிக்கப்படும்..!

wpengine

அக்மீமன பாடசாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – இராணுவ சிப்பாய் தவறு செய்யவில்லை

wpengine