விளையாட்டு

இலங்கை அணியில் இடம் பெறும் சாதனை வீரர்கள்; வாய்ப்பு இழந்த வீரர்கள் ( பெயர்பட்டியல்)



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலிய செல்லவுள்ள இலங்கை அணியில் லசித்மலிங்க குசால்மென்டிஸ் குசல் பெரேரா மற்றும் நிரோசன் டிக்வெல்ல ஆகியோர் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் தொடருக்கு முன்னர் தங்களை சிரேஷ்ட வீரர்கள் என தெரிவித்து கொண்டிருந்த நிரோஷன் டிக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, தனஞ்ஜய டி சில்வா, திஸர பெரேரா, அகில தனஞ்ஜய, லசித் மலிங்க, எஞ்சலோ மெத்தீவ்ஸ், சுரங்க லக்மால், தினேஷ் சந்திமால் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோரில் ஒரு சிலரை தவிர ஏனையோர் அணியில் வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அணியில் வாய்ப்பு இழந்த வீரர்கள் :

“குசல் ஜனித் பெரேரா, தனஞ்ஜய டி சில்வா, திஸர பெரேரா, அகில தனஞ்ஜய, எஞ்சலோ மெத்தீவ்ஸ், சுரங்க லக்மால், தினேஷ் சந்திமால் மற்றும் திமுத் கருணாரத்ன”

லசித்மலிங்க குசல்பெரேரா நிரோசன் டிக்வெல ஆகியோர் பாக்கிஸ்தானிற்கான தொடரை பாதுகாப்பு காரணங்களிற்காக புறக்கணித்திருந்தனர்.

குசல்மென்டிஸ் காயம் காரணமாக பாக்கிஸ்தானிற்கு எதிரான தொடரில் விளையாடவில்லை .இந்நிலையிலேயே இவர்கள் அணியில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய செல்ல எதிர்பார்க்கப்படும் இலங்கை இருபதுக்கு 20 அணி விபரம் :

“லசித்மலிங்க (அணித் தலைவர்), தசுன் ஷானக்க , தனுஷ்க குணத்திலக்க, கசுன் ராஜித, இசுரு உதான, அவிஷ்க பெர்னாந்து, லஹிரு குமார, லக்ஷான் சந்தகன், செஹான் ஜயசூரிய, குசல்பெரேரா, ஒசாத பெர்னாந்து,நிரோசன் டிக்வெல, வனிது ஹஸரங்க, நுவன் பிரதீப், பானுக்க ராஜபக்ஸ”

குறித்த அணியே இலங்கையின் எதிர்கால இருபதுக்கு 20 அணியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதேவேளை, பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த அஞ்சலோ பெரேரா, மினுத் பானுக, லகிருமதுசாங்க சதீர சமரவிக்கிரம ஆகியோர் அவுஸ்திரேலிய தொடரில் இடம்பெறமாட்டார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 240 ஓட்டங்கள் நிர்ணயம்

wpengine

IPL போட்டிகள் செப்டம்பரில் ஆரம்பம்

wpengine

LPL ரசிகர்களுக்கு வாய்ப்பு

wpengine