உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் க்ரஹம் வேறொரு அணிக்கு ஒப்பந்தம்..



இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் க்ரஹம் ஃபோர்ட் அயர்லாந்துக்கான புதிய பயிற்றுவிப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார்.

3 ஆண்டுகளுக்கு அவர் மேற்குறித்த இந்த ஒப்பந்தத்தை செய்திருப்பதாக அயர்லாந்து அறிவித்துள்ளது.

ஜோன் ப்ராஸ்வெல்லின் பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில், 56 வயதான ஃபோர்ட் அந்த அணியுடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, தமது ஒப்பந்த காலம் நிறைவடைவதற்கு முன்னதாக க்ரஹம் ஃபோர்ட் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகி சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

கூட்டணிக்கு ஹம்பாந்தோட்டையில் பாரியளவில் சரிவு – புலனாய்வு பிரிவு தகவல்

wpengine

தேர்தல் நடந்தால் மொட்டு கட்சிக்கு தோல்வி உறுதி: சுனில் ஹந்துன்நெத்தி

wpengine

தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவு வழங்கிய சந்தேக நபர் கைது

wpengine