விளையாட்டு

இலங்கை அணியின் சொதப்பல் தொடருமானால்.. – பதவி விலகுவது உறுதி..



இலங்கை அணியில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படாவிட்டால் பதவியிலிருந்து விலகி விடுவேன் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் அணியை முன்னேற்ற விளையாட்டுதுறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகரா சிறப்பு ஆலோசனை குழு ஒன்றை அமைத்துள்ளார்.

குழுவில் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் பிரபலங்களான ஜெயவர்தனே, சங்ககாரா, அரவிந்த டி சில்வா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இது குறித்து ஜெயவர்தனே கூறுகையில்;

“..கடந்த ஒரு வருடத்தை நான் வீணடித்து விட்டேன். ஆலோசனை குழு மூலம் நாங்கள் முன்மொழியும் விடயங்கள் இலங்கை அணிக்கு உதவும் என நம்புகிறேன். இது தான் என்னுடைய கடைசி முயற்சி, நாங்கள் எதிர்ப்பார்த்த முன்னேற்றத்தை இலங்கை அணி அடையாவிட்டால் நிச்சயம் பதவி விலகி விடுவேன்…” என கூறியுள்ளார்.

 

(rizmira)

Related posts

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் முடிவை ஆதரிக்கிறேன்

wpengine

டி20 உலகக் கிண்ணத்தை இந்தியாவே வெல்லும் – சச்சின்

wpengine

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை 20 ஓட்டங்களினால் வெற்றி

wpengine