ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இலங்கை​யில் மீண்டும் கொரோனா தாக்கும் சாத்தியம்; அதிர்ச்சி தகவல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது கட்டம் வெகு விரைவில் ஏற்பட கூடும் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக வடபகுதிக்கு வரும் இந்திய வர்த்தகர்களின் மூலம் இந்த நிலை ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு ஏற்பட்டால் அது மிகவும் ஆபத்தான நிலையாக மாறும் வாய்ப்புகள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது முதலாம் கட்டம் போன்று இருக்காது எனவும் இரண்டாம் கட்டம் தொடர்ந்தால் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் கட்டத்தை பொருத்தவரையில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு அருகில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

ஆனால் இந்த கட்டத்தில் சட்டவிரோதமாக வந்தவர்களை அடையாளம் காணுவதும் பாரிய சிக்கலாக மாறிவிடும் என சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தவில்லை என்பதனால் நாட்டிற்குள் சட்டவிரோதமாக வரும் நபர்களை உடனடியாக நிறுத்தவில்லை என்றால் இலங்கை மிகவும் ஆபத்தாகிவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சட்டத்தின் முன் சகலரும் சமமா??

wpengine

30 லட்சம் கொடுங்க…வளரும் நடிகையின் கோரிக்கையால் ஆடிப்போன ‘சாண்டல்வுட்

wpengine

சினேகாவுக்கு வளைகாப்பு

wpengine