உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் மீண்டும் ஊடகக் கட்டுப்பாடு – CPJ அதிருப்தி



ஊடக ஒழுங்குமுறைக் குழுவை இலங்கை அரசு மீண்டும் அமைத்துள்ளமைக்கு சர்வதேச ஊடக சுதந்திரத்திற்கான குழு பெரும் அதிர்ப்தியையும் கவலையையும் வெளியிட்டுள்ளது.

அதாவது, ஊடகவியலாளர்களை சட்டத்தில் தண்டிக்கவோ, அவர்களுக்கு அபராதம் விதிக்கவோ அதிகாரம் வழங்கும் ஊடக ஒழுங்குமுறைக் குழுவை இலங்கை அரசு மீண்டும் அமைத்துள்ளது.

இலங்கையில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது அமுலில் இருந்த ஊடக ஒழுங்குமுறைக் குழுவை கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீக்கியமை குறிபிடத்தக்கது.

எனினும், இப்போது ஊடகங்களில் மீதான கட்டுப்பாடுகளையும் கலைத்து உத்தரவிட்ட இந்நிலையில் ஊடக ஒழுங்குமுறைக் குழுவை மீண்டும் அமைக்க இலங்கை ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் 17ம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இது போன்ற நடவடிக்கை இலங்கை அரசு எடுத்திருப்பது சர்வதேச ஊடகவியலாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(riz)

 

 

Related posts

மீண்டும் முகக்கவசம் அணிய கோரிக்கை..!

wpengine

ரயில் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது…

wpengine

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கோட்டாவுக்கு ஆதரவு

wpengine