உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் மற்றுமோர் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல்



இலங்கையின் தம்புள்ளை, எலஹெர பிரதேசத்தில் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதன் நிறை 4800 கரட் என்றும், 485 கிராம் எடை கொண்டதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதன் பெறுமதி தொடர்பான சரியான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதற்கு முன்னர் அண்மையில் இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல்லின் பெறுமதி 300 மில்லியன் டொலர்கள் என அதன் உரிமையாளர் அறிவித்திருந்தார்.

அந்த நீலநிற மாணிக்கக் கல்லின் நிறை 1404.49 கரட் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதை விட அதிக நிறையுடைய மற்றுமொறு நீலநிற மாணிக்கக் கல்லே இவ்வாறு தம்புள்ளை, எலஹெர பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசியலமைப்பை மாற்றுவது குறித்து எதிர்பார்ப்பு – சபாநாயகர்

wpengine

நிலக்கரி கொள்வனவு மற்றும் அரிசி இறக்குமதி மாபியா தொடர்பில் கோப் குழு விசாரணை..

wpengine

“தேர்தலை நடத்தினால் நெல் கொள்வனவுக்கு பணம் இல்லை” – நிதி அமைச்சு..!

wpengine