உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கையில் பொது இடங்களில் ஆணுறை விற்பனை இயந்திரங்களை நிறுவும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்படும்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கையில் பொது இடங்களில் ஆணுறை விற்பனை இயந்திரங்களை நிறுவும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று தேசிய பாலியல் பரவும் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்புத் திட்டம் தெரிவித்துள்ளது.

எச்.ஐ.வி பரவுவதை தடுக்கும் வகையில் இத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் ஜானகி வித்யாபத்திரன தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டு முதல், இந்த ஆணுறை விற்பனை இயந்திரம் தொடருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்கு அருகில் நிறுவப்பட்டது.

ஆனால், கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டது.

இந் நிலையில், மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் முதல் நவம்பர் வரை ஆணுறைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது, கடந்த வாரம் 20 லட்சம் ஆணுறைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய, தற்போது மருத்துவமனைகளுக்கு வரும் மக்களுக்கு இந்த ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பாடசாலை மாணவியை உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அழைத்த ஆசிரியர் கைது..!

wpengine

டொக்டர் ஷாபி விடயத்தை கையில் எடுத்து சீரழித்த சன்ன ஜயசுமன SJB இல் இணைவதற்கு, கூட்டணி கட்சி தலைவர்களான மனோ,ரிஷாட் கடும் எதிர்ப்பு..!

wpengine

பயணத்தடை குறித்த புதிய அறிவிப்பு

wpengine