உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் நாளாந்தம் 64 புற்று நோயாளர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதற்கு கொள்கை ரீதியில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்று சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பாலித்த கருனாபிரேம தெரிவித்துள்ளார்.

புற்றுநோய் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் நேற்று(10) சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

நாளாந்த வாழ்க்கை கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலம் புற்றுநோய் ஏற்படுவதை கட்டுப்படுத்துவதற்கு முடியும் என சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் திருமதி ஜானகி விதான பத்திரண தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நாளாந்தம் 64 புற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், வருடத்தில் 23,530 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

வருடத்தில் இந்த நோயினால் 14,013 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

விவசாயிகளுக்கு சுபீட்சமான சூழல் உருவாகியுள்ளது

wpengine

கடந்த 24 மணித்தியாலத்தில் 5,989 பேருக்கு தடுப்பூசி

wpengine

எதிர்வரும் 22ம் திகதி முதல் இரவு நேரங்களிலும் திறக்கப்படவுள்ள மிருகக்காட்சி சாலை..

wpengine