Top Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் கொரோனா வைரஸ் ?



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு சீனப் பெண்ணும் ஒரு இலங்கை பெண்ணும் அங்கோட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி இருவரின் இரத்த மாதிரிகளும் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

இதேவேளை சீனாவில் வசிக்கும் மூன்று இலங்கை மாணவர்கள் நாடு திரும்பியுள்ளதாகவும், எனினும் அவர்கள் மூவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸால் இலங்கை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சுகாதார அமைச்சு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

சீனாவிலுள்ள இலங்கையர்களை பாதுகாக்கும் வகையில் அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகமும் விசேட ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்தின் உஹூன் பகுதியில் வசிக்கின்ற இலங்கையர்களின் உறவினர்கள் தொடர்பில் தகவல்களை திரட்டுவதற்கான ஏற்பாடுகளையும் தூதரகம் மேற்கொண்டுள்ளது. அதற்காக வட்ஸ்அப் குழு ஒன்றையும் ஆரம்பித்துள்ளது.

இந்த வைரஸ் தாக்கம் தொடர்பான உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுரைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளது. வைரஸ் தாக்கம் அதிகளவில் பரவி வரும் உஹூன் பகுதியில் இருக்கும் இலங்கையர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகளையும் இலங்கை தூதரகம் மேற்கொண்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள அலெக்ஸி குணசேகர 108613070138025 , கல்பா சஞ்சீவா – 108613051733302 , இன்னோகா வீரசிங்க 108615116905523 , திலினி குணரத்ன 108613121722296 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்பு கொண்டு உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் பீஜிங் , சென்டு மற்றும் சிவான்கோ ஆகிய விமான நிலையங்களிலிருந்து பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு தினமும் 4 விமானங்கள் வந்தடைவதாகவும் அந்த விமானங்களின் ஊடாக நாளொன்றிற்கு சுமார் 500 இற்கும் அதிகமான பயணிகள் நாட்டிற்கு வருகை தருகின்றனர்.

சீனாவின் பயணத்திற்கு பின்னரோ முன்னரோ மூச்செடுத்தல் தொடர்பில் சிக்கல் அறி குறி தோன்றினால் மருத்துவ உதவியை நாட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் உலக நாடுகளை எச்சரித்துள்ளது

Related posts

ஜனாதிபதியிடம் விளக்கம் கோரி கடிதம் – மஹிந்த

wpengine

இலங்கை அணியின் தோல்விக்கு காரணத்தை கூறினார் மேத்யூஸ்

wpengine

பேச்சுவார்த்தை தோல்வி – தபால் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு ஆயத்தம்.

wpengine