Top Story 2உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் உள்ள சவூதி மக்கள் நாடு திரும்பவும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் ஏனைய 4 ஆசிய நாடுகளில் வசிக்கும் சவூதி மக்களை விரைவில் நாடு திரும்புமாறு சவூதி அரசு அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த மாதம் சர்வதேச விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க ரியாத் முடிவு செய்தாலும் குறித்த இந்த நாடுகளில் இருந்து விமானங்கள் எதுவும் கிடைக்காது என்பதால் இஇவ்வாறு நாடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இதில் அடங்குவதாக டான் செய்தித்தாள் (Dawn Newspaper) செய்தி வெளியிட்டுள்ளது.

சிவில் ஏவியேஷன் பொது ஆணையம் (GACA) நேற்று(23) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் அதிகரித்து வரும் இந்நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருந்து பயணிக்கும் விமான சேவைகளை சவூதி அரசு தற்காலிகமாக தடை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 56,326 பேர் கைது

wpengine

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் சம்பவம் – நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் சற்று முன் மீட்பு

wpengine

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்..

wpengine