உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கையில் அழிக்கப்பட்டுள்ள கடவுச்சீட்டுகளால் பெருந்தொகை நஷ்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

2020 ஆம் ஆண்டில் கைவிடப்பட்ட இருபத்தி ஏழாயிரத்து ஐந்நூற்று முப்பத்தொன்பது வகையான எட்டு வகை கடவுச்சீட்டுகள் அழிக்கப்பட்டதன் மூலம் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கோபா குழு தெரிவித்துள்ளது.

இந்த கடவுச்சீட்டுகள் 2018 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக அழிக்கப்பட்டுள்ளதுடன், கடவுச்சீட்டுகளின் மற்றொரு தொகை கையிருப்பில் உள்ளமையும் கோபா குழுவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், 55 இலட்ச கடவுச்சீட்டுகள் பயன்பாட்டில் இல்லாமல் போயுள்ளதாகவும், தெரியவந்துள்ளது.

கடவுச்சீட்டுகள் அழிக்கப்பட்டமைக்கான காரணம்

இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைவர்களிடம் மேற்கொண்ட  விசாரணைகளில் பல வருடங்களாக சேகரிக்கப்பட்ட பழைய கடவுச்சீட்டுகள் பல்வேறு காரணங்களுக்காக அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கான புதிய கடவுச்சீட்டு அறிமுகம் செய்யப்பட்டதன் காரணமாக பழைய கடவுச்சீட்டுகளை பாவனையிலிருந்து நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

புகையிரதம் தடம் புரண்டதால் வட புகையிரத மார்க்கத்தில் புகையிரதங்கள் தாமதம்

wpengine

போலி கிரிப்டோ கரன்சி திட்டத்தில் சிக்கிக்கொண்ட இலங்கையர்கள் – பல லட்சம் ரூபாய் இழப்பு

wpengine

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் உயிரிழப்பு

wpengine