ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இலங்கையிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளை இறுதி நேரத்தில் கழற்றிவிட்டார் மஹிந்த…



உள்ளூராட்சி தேர்தல் வெற்றியினை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளை நேற்று(19) மாலை சந்திக்க இருந்த நிலையில் திடீரென இறுதி நேரத்தில் குறித்த சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய நாட்டில் நிலைமை நிச்சயமற்ற ஒன்றாக உள்ள நிலையில், குறித்த சந்திப்பினை திட்டமிட்ட வகையில், முன்கொண்டு செல்ல முடியாது என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும் பேராசிரியருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இறுதியாக இலங்கை வெளிநாட்டு ஊடகவியலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளை 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் திகதி சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma

Related posts

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் UNP சார்பில் 30க்கும் அதிகமான ஆதரவு…

wpengine

தற்கொலை எண்ணத்துடனான பதிவுகளுக்கு முன்னுரிமை: ஃபேஸ்புக்கின் புதிய உத்தி

wpengine

சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி – குடும்பஸ்தர் கைது

wpengine