உள்நாட்டு செய்திகள்வணிகம்

இலங்கையின் வொக்ஸ்வேகன் மோட்டார் கார் தொழிற்சாலையின் நிர்மாண பணிகள் ஆரம்பம்..



உலக புகழ் பெற்ற மோட்டார் கார் தயாரிப்பு தொழிற்சாலையான வொக்ஸ்வேகன் (Volkswagen) தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று(03) குளியாபிட்டியவில் இடம்பெறவுள்ளது.

ஜேர்மன் நாட்டின் மிகச் சிறந்த மோட்டார் வாகன தயாரிப்புக்களில் ஒன்றான வொக்ஸ்வேகன் மோட்டார் கார் தயாரிப்பு தொழிற்சாலையின் கிளையை இலங்கையில் ஆரம்பிக்கும் நோக்கிலேயே இன்று பிற்பகல் மூன்று மணியளவில் அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெறவுள்ளது.

இத்திட்டத்திற்காக 26.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அடிக்கல் நாட்டு வைபவம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் அந்தப் பகுதியில் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு அதிகமான வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சாதாரண தர மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர்

wpengine

அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோரது பிணை மனு கோரிக்கை பிற்போடப்பட்டது.. (Update)

wpengine

இலங்கை – தாய்லாந்துக்கிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

wpengine