உள்நாட்டு செய்திகள்வணிகம்

இலங்கையின் மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தில் முதலீடு செய்கிறது கொரியா



இலங்கையின் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் கொரியா 5 மில்லியனை முதலீடு செய்வதற்கு தயாராக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முதலீடுடன் மீன்பிடி கூட்டுத்தாபனத்தில் சேவைக்கு அதிகமாக தன்னார்வ பணியாளர்களை அழைத்துக் கொள்வதற்காக (A.V.S) என்ற திட்டத்தினை தொடர வெளிநாட்டு கூட்டு முயற்சியில் மீன்பிடி கூட்டுத்தாபனத்தை நடாத்தி செல்வதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மைக்காலமாக இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனமானது நட்டத்தில்இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நட்டத்தினால் அங்குள்ள பணியாளர்களுக்கு மாதாந்த கொடுப்பனவை வழங்க திறைசேரியின் நிதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் நல்ல மீன்கள் பிடிக்கப்பட்டாலும் வருடாந்தம் 15 கோடி அமெரிக்க டொலர்களுக்கு மீன் மற்றும் மீன் சார்ந்த பொருட்களை இலங்கை இறக்குமதி செய்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

தெரசா மே மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில்…

wpengine

ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்

wpengine

ரணிலுக்கு மஹநாயக்க தேரர்கள் ஆசி

wpengine