உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கு வருகை தந்த பாலஸ்தீன பிரஜை ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டார்…



(FASTNEWS|COLOMBO) இந்தியாவில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் இலங்கைக்கு வருகை தந்த பாலஸ்தீன பிரஜை ஒருவரை திருப்பி அனுப்ப கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சந்தேகம் ஏற்பட்டமையால் அவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

45 வயதான ஹஷீம் ரமதான் என்பவரே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

Related posts

களனி பல்கலைக்கழகம் எதிர்வரும் ஜூன் மீள் திறக்கப்படும்

wpengine

போட்டித்தொடரை ஆஸி அணியினர் வெற்றியுடன் ஆரம்பித்தது.

wpengine

ரஞ்சனின் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு [RESULT ATTACHED]

wpengine