விளையாட்டு

இலங்கைக்கு எதிரான எஞ்சிய போட்டி தொடரில் கோஹ்லிக்கு ஓய்வு..



இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் T-20 போட்டி தொடரில் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு புதிய அணித்தலைவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம் இரண்டே நாட்களில் கலந்தாய்வு செய்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் T-20 போட்டிக்கான அணி வீரர்களை தெரிவு செய்யவுள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் T-20 போட்டிகளுக்கும் புதிய அணித்தலைவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, ரோஹித் சர்மாவிற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் இந்திய கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் தொடர்களை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அனைத்து இந்திய போட்டிகளிலும் ஓய்வில்லாமல் விளையாடி வரும் வீராட் கோஹ்லிக்கு சிறிது ஓய்வு கொடுக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

(rizmira)

Related posts

பாகிஸ்தான் வீரர் அஸாம் சங்காவினது ஒருநாள் போட்டி சாதனையினை முறியடிக்க தயாராகிறார்..

wpengine

ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் இனையும் உள்ளடக்க பேச்சுவார்த்தை

wpengine

பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் இங்கிலாந்து அணியில்..

wpengine