Top Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அழைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலினா பீ டெப்ளிசுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.


இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை குறித்து விளக்கம் பெற்றுக்கொள்ளவே அமெரிக்க தூதுவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படாத தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆகவே அது தொடர்பில் மீளாய்வு செய்யுமாறு இலங்கை அரசு அமெரிக்காவிடம் கேட்டுள்ளது.

இந் நிலையிலேயே,  மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்காகவே இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன மேலும் தெரிவித்தார்.

Related posts

மனச்சாட்சியுள்ள எவரும் அவசரமாக தேர்தலைக் கோரப்போவதில்லை :அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்

News Editor

ரயில் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று(30) பேச்சுவார்த்தை….

wpengine

யோஷித உள்ளிட்ட ஐவருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்

wpengine