உள்நாட்டு செய்திகள்

இலக்கத் தகடு அற்ற கெப் வாகனத்தில் வந்தோர் பேரணிக்கு செல்லும் பேரூந்து மீது தாக்குதல்..


கொழும்பில் நடைபெறவுள்ள “மக்கள் பேரணி கொழும்புக்கு” எனும் பேரணிக்காக சென்ற தனியார் பேரூந்து ஒன்று இலக்கத் தகடு அற்ற கெப் வாகனமொன்றில் வருகை தந்த குழுவொன்றினால் இடைமறித்து இன்று(05) காலை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹாலி-எல போகஹமடித்த பிரதேசத்தில் வைத்தே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாம்பல் நிறமுடைய குறித்த கெப் வாகனத்தில் வருகை தந்திருந்த ஐவர் கொண்ட குழுவினாலேயே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தாக்குதலுக்கு இலக்கிய பெரோந்தில் உள்ளோர் கொழும்பு பேரணிக்காக செல்லும் பிறிதோர் பேரூந்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், குறித்த பேரூந்தில் முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவினது ஆதரவாளர்கள் என்பதும் மேலும் தெரிய வந்துள்ளது.

Related posts

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக ஏ9 வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.

wpengine

3 மாவட்டங்களுக்கு கடும் ஆபத்து – எச்சரிக்கையாக இருக்குமாறு கோரிக்கை

wpengine

நாளை முதல் புகையிரத சேவை நேரங்கள் பழைய நிலைமைக்கு மாற்றம்

wpengine