Top Story 1உள்நாட்டு செய்திகள்

இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தின்படி எரிபொருள்?



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்காத வாகனங்களின் இலக்க தகட்டின் இறுதி இலக்கங்களுக்கு அமைய வாரநாட்களில் எரிபொருளை விநியோகிக்குமாறு முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, இலக்க தகட்டில் 0, 1, 2 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கான எரிபொருளை திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும் 3, 4,5, 6 இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

வாகன இலக்க தகட்டில் 6,7,8, 9 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கான எரிபொருளை புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்குமாறும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த நடைமுறை ஆரம்பமாகும் தினம் தொடர்பில் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

Related posts

வேலைவாய்ப்பு அற்ற 50,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு

wpengine

ஜனாதிபதி – சீஷெல்ஸின் உப ஜனாதிபதி சந்திப்பு…

wpengine

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இருபதுக்கு 20 அணி விவரம் வெளியீடு – மாலிங்கவும் அணியில்…

wpengine