உள்நாட்டு செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி நேற்று முதல் சதொச கிளைகளின் ஊடாக விநியோகம்…



இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி நேற்று(24) முதல் சதொச நிறுவன கிளைகளின் ஊடாக விநியோகிக்கப்பட்டு வருவதாக கைத்தொழில மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு இலட்சம் மெற்றிக்தொன் நாட்டரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதில் 10 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி தற்பொழுது இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், களஞ்சியசாலையிலுள்ள அரிசியை நாடுமுழுவதிலுமுள்ள சதொச கிளைகளின் ஊடாக விநியோகிப்பதற்கு அமைச்சு ஆலோசனை வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.

லங்கா சதொசவின் மூலம் ஒரு கிலோ நாட்டரிசி 74 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறப்பு

Azeem Kilabdeen

கொழும்பில் பாரிய போக்குவரத்து மத்திய நிலையம்…

wpengine

மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதியாக ப்ரீதி பத்மன் சுரசேன பதவிப்பிரமாணம்…

wpengine