உள்நாட்டு செய்திகள்

இறக்குமதியாகும் வௌ்ளைச் சீனியின் கட்டுப்பாட்டு விலையை நீக்க அவதானம்…



இறக்குமதி செய்யப்படும் வௌ்ளைச் சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை நீக்குவது குறித்து, நுகர்வோர் விவகார அதிகார சபை அவதானம் செலுத்தியுள்ளது.

உலகச் சந்தையில் சீனிக்கான விலை அதிகரித்துள்ளமை காரணமாக, இது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 27ம் திகதி 1Kg சீனிக்கான கட்டுப்பாட்டு விலை 93 ரூபாவாக நியமித்து விஷேட வர்த்தமானி அறிவித்தலும் வௌியிடப்பட்டது.

எனினும், உலகச் சந்தையில் சீனிக்கான விலை அதிகரித்துள்ளமையால், தற்போது இலங்கை சந்தையில் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக சீனி விற்பனை செய்யப்படுவதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனவே, இறக்குமதியாளர்களை பாதுகாக்கும் நோக்குடன் கட்டுப்பாட்டு விலையை நீக்க தற்போது யேசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

பலத்த காற்று காரணமாக 17,000 வீடுகளுக்கான மின்சார விநியோகம் துண்டிப்பு…

wpengine

நாளை முதல் 10 அலுவலக ரயில்கள் சேவையில்

wpengine

போராட்டம் நடத்தும் இடங்களை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

wpengine