உலக செய்திகள்

“இர்மா” புயலின் தாக்கத்தினால் 6 பேர் பலி..



வடக்கு அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ள ‘இர்மா’ புயலின் தாக்கத்தினால் கரீபியன் கடல் பகுதியில் 6 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், புயலினால் பிரான்ஸ் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள செயின்ட் மார்ட்டின் தீவுகளில் 6 பேர் வரை பலியானதாக பிரான்ஸ் வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார்.

‘இர்மா’ புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், கரீபியன் நாடுகளான ஹைதி, கியூபா, டொமிகன் குடியரசு, புயிட்ரோ ரிகோ ஆகிய நாடுகளை தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் கடலில் மாபெரும் அலைகள் உண்டாகலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ‘இர்மா’ புயல் எச்சரிக்கையால் புளோரிடா மாகாணத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை – டிரம்ப்…

wpengine

இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி- உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு…

wpengine

எத்தியோபியன் பயணிகள் விமானம் விபத்து – 157 பேர் பலி…

wpengine