உள்நாட்டு செய்திகள்

இரு பிரதான கட்சிகளுக்கும் சம அளவில் அமைச்சுக்கள்



அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகள் இரண்டுக்கும் சம அளவில் அமைச்சுப் பதவிகள் பகிரப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றுக்கு 37 அமைச்சர்கள் வீதம் காணப்படுகின்றன. கடந்த வாரம் வழங்கப்பட்ட நான்கு பேருடன் இந்த தொகை சமப்படுகின்றது.

தற்பொழுது அரசாங்கத்திலுள்ள மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது. இதில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 40 பேரும், இராஜாங்க அமைச்சர்கள் 14 பேரும்,பிரதி அமைச்சர்கள்  28 பேரும் உள்ளனர். இதர கட்சிகளான ஸ்ரீ ல ங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய உட்பட ஏனைய கட்சிகளுக்கு 8 அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அரசாங்கத்திலுள்ள அமைச்சுக்களில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள் அதிகமாக உள்ள கட்சி ஐக்கிய தேசியக் கட்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

அரிசி தட்டுப்பாட்டிற்கு அரசாங்கம் இடமளிக்காது – ரிஷாத்..

wpengine

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு புதிய 02 நியமனங்கள்…

wpengine

அரசுக்கான கடைசி எச்சரிக்கை

wpengine