உள்நாட்டு செய்திகள்

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழப்பு…


ஜாஎல, தெற்கு நிவந்தம பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

நாரஹேன்பிட்ட பொலிஸ் வைத்தியசாலையில் பணியாற்றும் 49 வயதுடைய பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர் இனங்காணப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நல்லாட்சியில் அர்ஜுன் மகேந்திரனுக்கு முக்கிய உயர் பதவி

wpengine

முன்னைய அரசின் 7000 நியமனங்கள் இடைநிறுத்தம்

wpengine

மஹிந்த – மைத்திரி இடையே தீர்மானமிக்க கலந்துரையாடல்..

wpengine