Top Story 3உள்நாட்டு செய்திகள்

இரான் விக்கிரமரத்ன இராஜினாமா !



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

முன்னாள் நீதி இராஜாங்க அமைச்சர் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரான் விக்கிரமரத்ன ஐக்கிய மக்கள் சக்தி மொரட்டுவ தொகுதி அமைப்பாளர் பொறுப்பில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

மேலும் தனது இராஜினாமா கடிதத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த பாரளுமன்ற தேர்தலில் இரான் விக்கிரமரத்ன 38,837 வாக்குகளை பெற்றுக்கொண்டாலும் பாராளுமன்றத்திற்கு
செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை

இதனால் அவரின் பெயரை கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தேசிய பட்டியலில் குறிப்பிடுவர் என எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் தேசிய பட்டியலின் ஊடாகவும் இரான் விக்கிரமரத்னவிற்கு பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பு கிடைக்காததால் இந்த இராஜினாமா முடிவை அவர் மேற்கொண்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன

Related posts

இலங்கை அணி 2-0 என்ற அடிப்படையில் தொடரைக் கைப்பற்றியது…

wpengine

இந்தியா அணியானது முதலில் துடுப்பெடுத்தாட்டம்

wpengine

கபீர் ஹஷிமுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு

wpengine