உலக செய்திகள்

இராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் வீரர்கள் உட்பட 15 பேர் உயிரிழப்பு



(FASTNEWS|COLOMBO) – பாகிஸ்தானின் ராவல்பிண்டி பகுதியில் இராணுவ விமானம் குடியிருப்பு பகுதிக்குள் கீழே விழுந்து நொறுங்கியதில் வீரர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களில் 5 பேர் ராணுவ வீரர்கள் என இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில் 20 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்த தகவலை இராணுவம் வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பைடன் வெற்றியை ஒப்புக் கொண்டார் ட்ரம்ப்

wpengine

ஈரானின் இராணுவ படைப்பிரிவிற்கு புதிய தலைவர் நியமனம்

wpengine

ஐரோப்பிய யூனியனுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரிட்டன் விளக்கம்..

wpengine