ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இராணுவப் படையினருக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை..



தொழில்முறை சிப்பாய்களும், பிற இராணுவ அதிகாரிகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் சட்ட மசோதா ஒன்றை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

இணையதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ள புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் இதர அம்சங்கள் எதிரிக்கு விவரங்களை அளிக்கக் கூடும் என குறித்த இந்த மசோதா குறிப்பிடுகின்றது,

எடுத்துக்காட்டாக புவியில் இடம்காட்டும் தானியங்கி, இராணுவ படைப்பிரிவுகள் எங்கு நிறுத்தப்பட்டுள்ளன என்பதை காட்டக்கூடும்.

ரஷ்ய சிப்பாய்களால் பதிவேற்றப்பட்டுள்ள சமூக ஊடக பதிவுகள் உக்ரைன் மற்றும் சிரியாவில் படைப்பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ள தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன.

எதிர்வரும் ஜனவரி மாதம் குறித்த இந்த தடை அமலுக்கு வரும் என எதிர்பார்ப்பதாக ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் மேலும் தெரிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

பிரபாகரன் கொல்லப்பட்டதை நினைத்து மனவருத்தமடையும் சந்திரிக்கா!

wpengine

ஜனாதிபதியின் மகளுக்கு புதிய அரசியல் பதவி?

wpengine

மஹிந்தவின் கறுப்புப் பணத்தில் தான் கைவைக்கவில்லை – நலின்

wpengine