உள்நாட்டு செய்திகள்

இராட்டினம் விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில்…



வெயங்கொடை -நைவல பகுதியில் உள்ள தனியார் பூங்கா ஒன்றில் உள்ள இராட்டினம் ஒன்றின் ஒரு பகுதி உடைந்து விழுந்த விபத்தில், இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கட்டுப்பாட்டு விலையினை மீறி சுமார் 1900 வர்த்தகர்கள் கைது…

wpengine

கூட்டுறவு கிராமங்களை இலங்கையில் உருவாக்குவது தொடர்பில் சீனா கலந்துரையாடல்..

wpengine

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான ஆஸி அணி அறிவிப்பு..

wpengine