உள்நாட்டு செய்திகள்

இராஜாங்க அமைச்சர் பௌசிக்கு எதிரான வழக்கினை விசாரணை செய்ய திகதி அறிவிப்பு.



அரச வாகனமொன்றை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தொடரப்பட்டிருந்த வழக்கினை விசாரணை செய்ய இன்று(05) திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனுடன் தொடர்புடைய வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு திகதி குறிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் , குறித்த இந்த வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 24ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தியதால் 10 இலட்சம் ரூபாய் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக இவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira) 

Related posts

ஜனாதிபதி விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு..!

wpengine

இவ்வருட நடுப்பகுதிக்குள் எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் – பிரதமர்

wpengine

கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு அருகதையற்ற ஹக்கீம் – ஹிஸ்புல்லாஹ்

wpengine