ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இரவோடிரவாக அகற்றப்பட்டுள்ள நடைபாதை


வத்தளை பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த உடற்பயிற்சி நடைபாதை இரவோடிரவாக அகற்றப்பட்டுள்ளமை பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் நகர அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் வத்தளையிலும் உடற்பயிற்சிக்கான நடைபாதை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. பொதுமக்களும் இதனை பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் வத்தளை உடற்பயிற்சி நடைபாதை இடித்து அகற்றப்பட்டுள்ளது. அதன் மின்விளக்கு கம்பங்களும் பிடுங்கி எறியப்பட்டுள்ளன.

இது குறித்து பொதுமக்கள் வத்தளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள போதிலும் பொலிஸார் அது குறித்து தமக்கு தகவல் எதுவும் தெரியாது என்று கைவிரித்துள்ளனர்.

எனினும் உடைக்கப்பட்டுள்ள நடைபாதைக்கு பொலிஸாரின் காவல் வழங்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே குறித்த நடைபாதை அமைக்கப்பட்டிருந்த பகுதியில் வேறு அபிவிருத்தித் திட்டமொன்றை முன்னெடுக்கும் நோக்கில் அரச அனுசரணையுடன் குறித்த நடைபாதை உடைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஸ்காட்லாந்தில் தொலைந்த கமெரா, ஸ்வீடனில் கிடைத்த அதிசயம்…

wpengine

உலகறிந்த பிரபல நீலப்பட நடிகை மியா கலிபா விபத்தில்….

wpengine

கல்கிஸ்ஸ பிரதேசங்களில் ஹெரோயினுடன் ஐவர் கைது!

wpengine