உள்நாட்டு செய்திகள்

இரத்மலானையில் வீடு புகுந்து ஒருவர் சுட்டுக்கொலை!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரத்மலானை, சில்வா மாவத்தை பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்குள் நுழைந்த இருவர் வீட்டில் இருந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த குறித்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரத்மலானை சில்வா மாவத்தையில் வசிக்கும் 30 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலைக்கு டி-56 ரக துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன், கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.

Related posts

இலங்கை வான் பரப்பில் கூகுள் பலூன் விழுந்து நொறுங்கியதா?.. தரையிறக்கப்பட்டதா..?

wpengine

புகையிரதத்தில் மோதுண்ட மாணவிகளின் இறுதிக்கிரியைகள் குறித்து விசேட அறிவித்தல்

wpengine

வாக்குப் பெட்டிகளை கொண்டுசெல்ல 1100 பேருந்துகள்

wpengine