உள்நாட்டு செய்திகள்

இரத்மலானே அஞ்சுவின் உதவியாளர் ஒருவர் கைது…


பாதாள உலக குழு உறுப்பினருடன், பிரபல போதைப்பொருள் மோசடியாளரான இரத்மலான அஞ்சுவின் உதவியாளர் ஒருவர் மஹரகம – வேதமாவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு(26) குறித்த பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது செய்யப்பட்ட நபர் பிலியந்தலை பகுதியை சேர்ந்த 32 வயதான நபர் என தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபருக்கு எதிராக மனித கொலை குற்றச்சாட்டு காணப்படுவதுடன், இரத்மலானே அஞ்சுவின் போதைப்பொருளை விநியோகத்தில் மற்றும் பண கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related posts

பொலன்னறுவை – மஹியங்கனை பிரதான வீதியை மறித்து, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில்..

wpengine

ஜனாதிபதி சட்டத்தரணி சுரேந்திரன் காலமானார்

wpengine

மேல் நீதிமன்றத்தின் முன்னிலையில் நிஸ்ஸங்க

wpengine