உள்நாட்டு செய்திகள்

இரத்தினபுரியில் மண்சரிவு காரணமாக 66 குடும்பங்கள் வெளியேற்றம்..



இரத்தினபுரி வவெல்வத்த வீதியில் கலபொட சில்வலான் தோட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக 82 குடும்பங்களை சேர்ந்தோர் பாதுகாப்பான இடங்களிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

இதேவேளை நேற்று(17) ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 66 குடும்பங்களை சேர்ந்தோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பட்டுள்ளனர்.

இவர்கள் கலபொடயில் அமைக்கப்பட்டுள்ள கட்டதொகுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு தேவையான வசதிகளை இரத்தினபுரி பிரதேச செயலகம் செய்துவருவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் உள்ள கலபொட மகாவித்தியாலயத்தின் சுவர்களிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவெல்வத்தை பிரதான வீதியில் துறைகந்த ஆந்தஎல பிரதேசத்திற்கான வீதிகளில் மண்மேடுகள் சரிந்தமையால் நேற்று(17) இரவு 7 மணியளவில் இந்த வீதிகள் மூடப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தம்…

wpengine

பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று

wpengine

சமன்லால் பெர்னாண்டோ கைது

wpengine