உள்நாட்டு செய்திகள்

இரத்தினக்கல் வர்த்தகர் கொலை – நால்வரும் விளக்கமறியல்



(ஃபாஸ்ட் நியூஸ் | காலி ) – தலாபிடிய இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களையும் நாளை மறுதினம்(08) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்களை இன்று காலி மேலதிக நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த வருடம் செப்டெம்பர் 19ஆம் திகதி குறித்த வர்த்தகர் வீட்டில் இருந்தபோது, கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தொலைபேசி உரையாடல்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்ரீசுக பிரதமர் வேட்பாளராக மஹிந்த மற்றும் சமலின் பெயர்கள் முன்மொழிவு

wpengine

இருவர் வெட்டிக் கொலை

News Editor

விலைகள் காட்சிப்படுத்தப்படாவிடின் ஓரு இலட்சம் ரூபா தண்டம் – நுகர்வோர் அதிகாரசபை அறிவிப்பு…

wpengine