ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இரண்டு வயது சிறுமி வெளியில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார்



கல்னேவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டி ஒன்றை திருப்புவதற்கு முற்பட்ட வேளை அந்த முச்சக்கர வண்டி சரிந்து விழுந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் முச்சக்கர வண்டியின் உள்ளே இருந்த 2 வருடமும் 7 மாதங்களே ஆன சிறுமி வெளியில் தூக்கி வீசப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த சிறுமி தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற போது குறித்த சிறுமியின் தாய் மற்றும் 7 வயதுடைய சகேதரர் ஒருவரும் முச்சக்கர வண்டியினுள் இருந்துள்ளதுடன், முச்சக்கர வண்டியை செலுத்தியவர் உயிரிழந்த சிறுமியின் தந்தை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கல்னேவ, பன்சலை வீதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளர்.

Related posts

மைத்திரி விடயத்தில் மஹிந்த vs பொன்சேகா கைகோர்த்த நிலையில்….

wpengine

என் தந்தை மீது குற்றச்சாட்டா? மறுக்கும் நாமல்

wpengine

அமைச்சரவையில் 06 வெற்றிடங்கள் – தேசிய அரசில் மொத்தமாக 16 பதவிகளுக்கு வெற்றிடம்…

wpengine