உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி வாகை



இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 23 ஓட்டங்களால் வெற்றி வாகை சூடியது.

கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் சுவீகரித்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக சார்ள்ஸ் 34 ஓட்டங்களையும், தினேஷ் ராம்டின் 34 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் லசித் மாலிங்க 16 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும், மிலிந்த 17 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.

163 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 10 விக்கட்டுக்களையும் இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பாக தில்ஷான் 52 ஓட்டங்களையும், ஜெயசூரியா 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இதன்படி இரு அணிகளுக்குமிடையிலான இருபதுக்கு இருபது தொடரில் 1-1 என்ற அடிப்படையில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.

Related posts

படையினரின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு!

wpengine

ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டாம் – பிரதமர்

wpengine

கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பதவிக்கு சனத் ஜயசூரிய?

wpengine