உலக செய்திகள்

இரண்டாவது தடவையாகவும் பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடி



(FASTNEWS|COLOMBO) பாரத பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது தடவையாக இன்று(30) பதவியேற்கவுள்ளார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் பதவியேற்பு வைபவம் இன்று மாலை இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில், இரண்டாவது தடவையாக பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

இதனிடையே, அயல்நாடுகளுடனான உறவுகளுக்கு முதலிடம் எனும் கொள்கையினடிப்படையில் பதவியேற்பு விழாவுக்கு பிம்ஸ்டெக் நாடுகளான இலங்கை பங்களாதேஷ், கிர்கிஸ்தான், மொரீசியஸ், நேபாளம், பூட்டான், மியன்மார் மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜெயலலிதா இறந்துவிட்டார்… நான் சொன்னது பொய்யென்றால்..? தமிழச்சி அதிரடி

wpengine

வனூட்டில் உள்ள எரிமலையிலிருந்து,வெடித்து சிதறும் தீப்பிழம்புகள்

wpengine

சவூதி இளவரசர் ஒருவருக்கு தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்.

wpengine