Top Story 1உள்நாட்டு செய்திகள்

இரசாயன உர இறக்குமதி : தனியாருக்கு அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரசாயன உரம், பீடை கொல்லிகள் மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

குறித்த அனுமதி இன்று (24) முதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் இரசாயன உரம், பீடைகொல்லி மற்றும் திரவ உரம் என்பவற்றை இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்து 2014இல் வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

முன்னதாக பீடைகொல்லி பதிவாளரால் 2014இல் வெளியிடப்பட்ட க்ளைபோசேட் உள்ளிட்டவற்றின் பயன்பாடு மற்றும் விற்பனையைத் தடுக்கும் விசேட வர்த்தமானியை இல்லாதொழித்து, கடந்த திங்கட்கிழமை விசேட வர்த்தமானி ஒன்று வெளியாக்கப்பட்டது.

எனினும் அவ்வாறு இந்தத் தடையை இல்லாதொழிக்க வெளியிடப்பட்ட வர்த்தமானி செல்லுபடியற்றது என அமைச்சர் மகிந்தானந்த நேற்று நாடாளுமன்றில் வைத்தும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கோட்டபாய குறித்த ஜனாதிபதியின் கருத்து குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடத்த கோரிக்கை.

wpengine

பேர்ப்பச்சுவல் நிறுவனம் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி விலகல்..

wpengine

மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாக அரசு உறுதி – மங்கள சமரவீர…

wpengine