உள்நாட்டு செய்திகள்

இரசாயனவியல் வினாக்களை முன்கூட்டியே கசிய விடப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவருக்கு பிணை..



2017ம் வருட உயர்தர பரீட்சை இரசாயனவியல் வினாக்களை முன்கூட்டியே கசிய விடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த இருவருக்கு இன்று(18) கம்பஹா மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிணை விடுவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஒரு லட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணை மற்றும் 10,000 ரூபாய் ரொக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இருவரையும் ஒவ்வொரு ஞயிற்றுக் கிழமையிலும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதோடு, இருவரும் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவரும், ஆசிரியரின் தந்தையும் ஏற்கனவே பிணையில் விடுவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

மாத்தறை – பெலியத்த வரையிலான புகையிரத சேவை…

wpengine

மே மாதமளவில் பாராளுமன்றில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடான சட்டம்…

wpengine

பொலிஸ் திணைக்களத்தின் பதில் ஊடகப் பேச்சாளராக அஜித் ரோஹன நியமனம்

wpengine